உள்ளூர் செய்திகள்
உலா வரும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்
- வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை அருகிலுள்ள மணியம்பாடி கிராமத்திற்குள் புகுந்து விவசாய நிலங்களில் சுற்றித்திரிந்தது.
- யானை கிராம பகுதிகளில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் உள்ளன.
இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது அருகில் உள்ள கிராம பகுதிகளுக்குள் புகுந்து விடுவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் நேற்று முன்தினம் அய்யூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை அருகிலுள்ள மணியம்பாடி கிராமத்திற்குள் புகுந்து விவசாய நிலங்களில் சுற்றித்திரிந்தது.
இந்த யானை விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை மிதித்து, தின்று அட்டகாசம் செய்தன.
யானை கிராம பகுதிகளில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.