உள்ளூர் செய்திகள்
கைப்பந்து போட்டியில் சாதனை படைத்த ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு பாராட்டு
- மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
- அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி, 8-வது இடத்தை பிடித்து சாதனை புரிந்தனர்.
ஓசூர்,
தமிழ்நாடு கைப்பந்து கழகம் சார்பில் 70-வது ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், 76 அணிகள் கலந்து கொண்டன.
இந்த போட்டியில், ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி, 8-வது இடத்தை பிடித்து சாதனை புரிந்தனர்.
இதனைத்தொடர்ந்து, ஓசூரில் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாதனை புரிந்த மாணவிகளுக்கு தலைமையாசிரியை லதா, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, உடற்கல்வி ஆசிரியர் முருகேஸ்வரி, பயிற்சியாளர்கள் தாயுமானவன், மாணிக்கவாசகம், ராமமூர்த்தி மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரிய ஆசிரியையர் கலந்து கொண்டனர்.