உள்ளூர் செய்திகள்
சாத்தான்குளம் அருகே கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசு பெற்ற அணிக்கு ரூ.10 ஆயிரம் பரிசு- ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சார்பில் வழங்கப்பட்டது
- புனித மிக்கேல் அதிதூதரின் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான 3-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.
- முதல் பரிசு ரூ.10,000 ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சார்பில் பார்த்தசாரதி வழங்கினார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே புனித மிக்கேல் அதிதூதரின் திருவிழாவை முன்னிட்டு புனித மிக்கேல் கிரிக்கெட் கிளப் நடத்திய மாவட்ட அளவிலான 3-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் பரிசை திசையன்விளை அணியும், 2-ம் பரிசை புனித மிக்கேல் கிரிக்கெட் கிளப் அணியும் தட்டிச் சென்றனர். முதல் பரிசு ரூ.10,000 தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சார்பில் சாத்தான்குளம் வடக்கு வட்டார தலைவர் பார்த்தசாரதி வழங்கினார். நொச்சிகுளம் கிராம கமிட்டி தலைவர் அந்தோணிராஜன், சாத்தான்குளம் வடக்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ்கிளிண்டன், சாத்தான்குளம் இளைஞர் காங்கிரஸ் ஜெரால்டுரீகன் ஆகியோர் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.