உள்ளூர் செய்திகள்

அன்னூர் கணேசபுரத்தில் குப்பை கூடமாக மாறிய பயணிகள் நிழற்குடை

Published On 2022-10-29 09:01 GMT   |   Update On 2022-10-29 09:01 GMT
  • பள்ளி கல்லூரி பஸ் என 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றனர்.
  • மழையின் காரணமாக பயணிகள் நிழற்குடை இடிந்து விழும் நிலையில் மோசமாக உள்ளது.

அன்னூர்,

கோவை மாவட்டம் அன்னூர் வட்டம், காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரமானது கோவையில் இருந்து சக்தி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த ஊரில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் மற்றும் வேலைக்கு செல்வோர்,பொதுமக்கள் என தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த சாைலயில் பயணிக்கின்றனர்.

மேலும் ஒரு நாளைக்கு கோவை-சக்தி ேராட்டில் தனியார் பஸ், அரசு பஸ் மற்றும் பள்ளி கல்லூரி பஸ் என சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கணேசபுரத்தில் அமைந்து உள்ள பயணியகள் நிழற்குடை குப்பை கிடங்காகவும், வாகனம் நிறுத்தும் இடமாகவும், குடிமகன்கள் உறங்கும் இடமாகவும் மாறி உள்ளது.

மேலும் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக பயணிகள் நிழற்குடை இடிந்து விழும் நிலையில் மோசமாக உள்ளது. இந்த நிழற்குடையானது 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய நிழற்குடை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உடனடியாக இந்த நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்தி புதிய நிழற்குடையை ஊராட்சி நிர்வாகம் கட்டித் தரவேண்டும். நிழற்குடையில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்றி, அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News