உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடையை திறந்து வைத்து ஞானதிரவியம் எம்.பி. ரேஷன் பொருட்களை வழங்கினார். அருகில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் உள்ளனர்.

திசையன்விளை அருகே ரூ.9 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை

Published On 2023-05-13 14:28 IST   |   Update On 2023-05-13 14:28:00 IST
  • வாழை தோட்டம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது.
  • ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்து ரேஷன் பொருட்களை வழங்கினார்.

திசையன்விளை:

திசையன்விளை அருகே குமாரபுரம் பஞ்சாயத்து வாழை தோட்டம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது.

அதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்து ரேஷன் பொருட்களை வழங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் வரவேற்று பேசினார்.

தொடர்ந்து திசையன்விளை பேரூராட்சி சண்முகபுரத்தில் உயர்கோபுர மின் விளக்னை இயக்கி வைத்தார். விழாவில் திசையன்விளை பேரூராட்சிகவுன்சிலர்கள் நடேஷ் அரவிந்த், கமலா, சுயம்புராஜன், பொன்மணி நடராஜன், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன், குமாரபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் ஆனிஷா பயாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News