உள்ளூர் செய்திகள்

நீலகிரி மாவட்ட தொழிலாளர் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் செய்யபட்டுள்ளார்.

Published On 2023-08-17 14:39 IST   |   Update On 2023-08-17 14:39:00 IST
முன்னாள் தலைவர் குரூஸ் முத்து பிரின்ஸ், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவராக பொறுப்பேற்கிறார்.

ஊட்டி,

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் மாநில தலைவரும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவருமான பொன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் சமூக சேவையில் சிறப்பாக ஈடுபட்டு வரும் சமூக சேவகர் ஆரோக்கிய அருள் ஜேம்ஸ், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் நீலகிரி மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கட்சியின் நீலகிரி மாவட்ட தலைவராக இருந்த குரூஸ் முத்து பிரின்ஸ், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவராக பொறுப்பேற்கிறார். அதேசமயம் அவர் நீலகிரி மாவட்டத்தின் தமிழக கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவராக நீடிப்பார்.

புதிதாக நீலகிரி மாவட்டத் தலைவராக பொறுப்பேற்று இருக்கும் ஆரோக்கிய அருள் ஜேம்ஸ்-சுக்கு தோழமைக் கட்சியினர் மற்றும், தன்னார்வல தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

Tags:    

Similar News