உள்ளூர் செய்திகள்

பழுதடைந்த நிலையில் காணப்படும் ஆறுகாட்டுத்துறை அரசு உயர்நிலைப்பள்ளி.

அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்

Published On 2022-11-30 12:50 IST   |   Update On 2022-11-30 12:50:00 IST
  • பள்ளியில் உடைந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே கட்டிடத்தில் குவித்து வைக்கபட்டுள்ளது.
  • பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் குழந்தைகள் இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் முழுவதும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.

இதனால் பள்ளியில் உடைந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே கட்டிடத்தில் குவித்து வைக்கபட்டுள்ளது. இந்நிலையில், கடந்த

2017-ம் ஆண்டுபேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக பல்நோக்கு சேவை மையம் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தில், தற்போது வகுப்பறைகள் இயங்கி வருகின்றன.

பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆறுகாட்டுத்துறை கிராம பஞ்சாயத்தார்கள் சார்பில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, மாணவர்களின் நலன் கருதி அரசு பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News