உள்ளூர் செய்திகள்
சின்னப்பம்பட்டியில் வீட்டிற்கு முன்பு நிறுத்திய மோட்டார் சைக்கிள் மாயம்
- பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 26), கூலிதோழிலாளி.
- வழக்கம் போல் வண்டியை நிறுத்திவிட்டு சென்றவர் மாலை வந்து பார்த்த போது மோட்டார்சைக்கிளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 26), கூலிதோழிலாளி. இவர் தினசரி வேலைக்கு செல்லும் போது தனது மோட்டார் சைக்கிளை சின்னப்பம்பட்டியில் உள்ள தனது நண்பர் ராஜா என்பவரது வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம் போல் வண்டியை நிறுத்திவிட்டு சென்றவர் மாலை வந்து பார்த்த போது மோட்டார்சைக்கிளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர் தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில்போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.