முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் எம்.எல்.ஏ நூலகம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.
- ரூ.25 லட்சம் மதிப்பில் ஏசி வசதியுடன் கூடிய நவீன நூலகம் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
- முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் எம்.எல்.ஏ நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நூலகம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூ ராட்சியில் பாலக்கோடு ரோட்டில் ராஜ்யசபா எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் ஏசி வசதியுடன் கூடிய நவீன நூலகம் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
இதில் பேரூராட்சி தலைவர் மனோகரன், செயல் அலுவலர் ஆயிஷா, ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெரியண்ணன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் எம்.எல்.ஏ நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நூலகம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் காவேரி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், நகர செயலாளர் காந்தி, அண்ணா தொழி ற்சங்க மண்டல தலைவர் சிவம், ஒன்றிய கவுன்சிலர் காவேரியம்மாள் மாணிக்கம், பேரூராட்சி கவுன்சிலர் இந்திராணி ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.