உள்ளூர் செய்திகள்
மனைவியை வேலைக்கு விட்டு விட்டு திரும்பியவர் விபத்தில் பலி
- செந்தாமரை தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு செல்கிறார்.
- வேக தடுப்பு ஒன்றில் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயகொட்டை அருகேயுள்ள உள்ளட்டி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 35). இவரது மனைவி செந்தாமரை தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு செல்கிறார்.
நேற்று தனது இருசக்கர வாகனத்தில் மனைவியை அழைத்துக்கொண்டு அவர் வேலை செய்யும் இடத்தில் முனிராஜ் விட்டுள்ளார்.
பின்னர் வீட்டுக்கு திரும்புகையில் அந்த நிறுவன வளாகத்திலேயே உள்ள வேக தடுப்பு ஒன்றில் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
ராயக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முனிராஜை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை முனிராஜ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ராயகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.