உள்ளூர் செய்திகள்

சாலையில் கருங்கற்களுடன் தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் லாரி.

கருங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்

Published On 2023-08-12 08:52 GMT   |   Update On 2023-08-12 08:52 GMT
  • வேதாரண்யம் -கரியாப்பட்டினம் சாலையில் கருங்கல் ஏற்றிய லாரி வந்து கொண்டிருந்தது.
  • அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறை மீனவ கிராமத்தில் ரூ.150 கோடி செலவில் படகு நிறுத்த தூண்டில் முள் வளைவு கட்டும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது .

இதற்காக புதுக்கோ ட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் கருங்கல் ஏற்றி வந்து ஆறுகாட்டுதுறை கடலில் கொட்டி துண்டு முள் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை மணக்காடு பகுதியில் வேதாரண்யம் -கரியாப்பட்டினம் சாலையில் திருச்சியில் இருந்து கருங்கல் ஏற்றி லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக கார் வந்தது.

திடீரென எதிர்பா ராதவிதமாக லாரி- கார் நேருக்கு நேர் மோதி கொண்டன.

இதில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து அதில் இருந்த கருங்கற்கள் சாலையில் சிதறின. விபத்தில் டிரைவர் முத்து பலத்த காயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இமு பற்றி கரியா பட்டி னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

Tags:    

Similar News