உள்ளூர் செய்திகள்

தீர்த்தமலையில் சைக்கிள் ஸ்டாண்டாக மாறிய உடற்பயிற்சி கூடத்தை படத்தில் காணலாம்.

தீர்த்தமலை பகுதியில் சைக்கிள் ஸ்டாண்டாக மாறிய அரசு உடற்பயிற்சி கூடம்

Published On 2023-06-19 14:58 IST   |   Update On 2023-06-19 14:58:00 IST
  • உடற்பயிற்சி கூடம், தீர்த்தமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் இடமாக மாறி உள்ளது.
  • தற்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டு ஒப்பந்ததாரர் வசூல் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அரூர்,

தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட தீர்த்தமலை ஊராட்சியில் இளைஞர்கள் மற்றும் சிறியவர்கள் பொழுதுபோக்குக்காக அம்மா பூங்கா அமைக்கப்ப ட்டுள்ளது.

பூங்காவுடன் இளை ஞர்களுக்கு உடற்பயிற்சி கூடம் அ.தி.மு.க. ஆட்சியில் பல லட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

தற்போது தீர்த்தமலை அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம், தீர்த்தமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் இடமாக மாறி உள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் நிறுத்தும் இருசக்கர வாகனங்களுக்கு ஒப்பந்ததாரர் மூலம் ரூ.20 வசூலிக்கப்படுகிறது.

இளைஞர்கள் மற்றும் சிறியவர்கள் விளை யாடவும், உடற்பயிற்சி செய்யவும் அமைக்கப்பட்ட கூடம் தற்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டு ஒப்பந்ததாரர் வசூல் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் இளைப்பாற பூங்காவை பயன்படுத்தும் வகையிலும் இளைஞர்களுக்காக உருவா க்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் மீண்டும் மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags:    

Similar News