உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் அருகே லாரி மீது அரசு விரைவு பஸ் மோதியது

Published On 2023-11-29 09:33 GMT   |   Update On 2023-11-29 09:33 GMT
பஸ்சில் பயணம் செய்த அனைவரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விழுப்புரம்:

கம்பத்திலிருந்து அரசு சொகுசு பஸ் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த பஸ்சை தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் ஓட்டி வந்தார். பஸ்சில் 35 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் அருகே செல்லும்போது முன்னாள் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் அரசு சொகுசு பஸ் லாரி மீது மோதி முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல நொறுக்கியது.பஸ் கண்டக்டர் சென்னையைச் சேர்ந்த செல்வம் சிறுகாயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பஸ்சில் பயணம் செய்த அனைவரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மற்றொரு விபத்து : சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன்( வயது 47) ஓட்டி சென்றார். பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி தனியார் ஓட்டல் அருகே வரும்போது முன்னாள் சென்ற லாரியானது திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது இதனால் அரசு பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதி முன்பக்கம் முழுவதும் சேதம் அடைந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 3 பேர் சிறு காயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர்பஸ்சில் பயணம் செய்த பயணிகள் கூச்சலிட்டதை கண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார் .இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News