உள்ளூர் செய்திகள்

மூலவைகையாற்றில் மணல் அள்ளப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பள்ளங்கள்.

வருசநாடு போலீஸ் நிலையம் அருகே மூலவைகையாற்றில் மணல் திருடும் கும்பல்

Published On 2023-06-02 05:22 GMT   |   Update On 2023-06-02 05:22 GMT
  • இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடாத காரணத்தினால் மணல் திருட்டு சுதந்திரமான முறையில் நடைபெற்று வருகிறது.
  • தற்போது போலீஸ் நிலையத்திற்கு அருகிலேயே நடைபெற தொடங்கியுள்ளது.

வருசநாடு:

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு கிராமத்தில் போதிய அளவில் மழை இல்லாத காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது வைகை ஆற்றில் நீர்வரத்து மிக குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் வருசநாடு வைகை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

வருசநாடு போலீசார் மணல் திருட்டு தொடர்பாக போதிய அளவில் ரோந்து பணிகளில் ஈடுபடுவது இல்லை. குறிப்பாக இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடாத காரணத்தினால் மணல் திருட்டு சுதந்திரமான முறையில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு வருசநாடு போலீஸ் நிலையத்தில் இருந்து 100 மீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ள தடுப்பணை அருகே ஆற்றில் சிலர் டிராக்டர் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் தற்போது வரை மணல் திருட்டில் ஈடுபட்ட வர்களை போலீசாரால் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் சாக்கு மூட்டைகளில் மணல் திருடியவர்களை போலீசார் கைது செய்து தீவிர நடவடிக்கைக்கு உட்படுத்தி வருகின்றனர். ஆனால் வருசநாடு போலீசார் மணல் திருட்டு தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பதில்லை.

எனவே பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் போலீ சார் ரோந்து செல்லாத பகுதிகளில் நடைபெற்று வந்த மணல் திருட்டு தற்போது போலீஸ் நிலைய த்திற்கு அருகிலேயே நடை பெற தொடங்கியுள்ளது. எனவே போலீசார் துணையோடு மணல் கடத்தல் நடைபெறுகிறதா? என பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலை நீடித்தால் மணல் திருட்டு அதிகளவில் நடைபெற்று வருசநாடு பகுதியில் நிலத்தடி நீர்ம ட்டம் குறைந்து கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாயம் பாதிப்படையும் நிலை உருவாகியுள்ளது. மாவட்ட போலீஸ் அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுத்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும். மேலும் இரவு நேரங்களில் ஆற்று பகுதியில் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News