உள்ளூர் செய்திகள்
- ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையம் இந்திரா நகர் பகுதியில் மாட்டு கொட்டகையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
- மேலும் இதில் மாட்டு கொட்டகை இருந்த பொருட்கள் உள்ளிட்டவர்கள் எரிந்து சேதமாகின.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையம் இந்திரா நகர் பகுதியில் சேர்ந்தவர் தனபாக்கியம். இவருக்கு சொந்தமான தகரத்தால் வேயப்பட்ட மாட்டு கொட்டகையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சனைந்த அருகில் இருந்தவர்கள் மற்றும் தனபாக்கியம் உள்ளிட்டோர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் தீ கொழுந்து விட்டு இருந்ததால் இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் இதில் மாட்டு கொட்டகை இருந்த பொருட்கள் உள்ளிட்டவர்கள் எரிந்து சேதமாகின.