உள்ளூர் செய்திகள்

கிராவல் மண்வெட்டி எடுத்தவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிப்பு

Published On 2023-02-17 07:20 GMT   |   Update On 2023-02-17 07:20 GMT
  • வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எண்.3 கொமாரபாளையம் பஞ்சாயத்து கோம்பைக்காடு அண்ணாமலைப்பட்டி பகுதியில் அனுமதி இன்றி மலைகளை வெடி வைத்து தகர்த்து கற்கள் உற்பத்தி செய்தும் கிராவல் மண்ணை அள்ளிச் செல்லும் சம்பவம் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
  • அப்போது அளவுக்கு அதிகமாக கிராவல் மண் வெட்டி எடுத்ததை உறுதிப்படுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நாமக்கல் ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கிராவல் மண் வெட்டி எடுத்த தங்கம் என்பவரது மனைவி சித்தேஸ்வரிக்கு ரூ.19.84 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் ஆர்.டி.ஓ மஞ்சுளா உத்தரவிட்டார்.

நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எண்.3 கொமாரபாளையம் பஞ்சாயத்து கோம்பைக்காடு அண்ணாமலைப்பட்டி பகுதியில் அனுமதி இன்றி மலைகளை வெடி வைத்து தகர்த்து கற்கள் உற்பத்தி செய்தும் கிராவல் மண்ணை அள்ளிச் செல்லும் சம்பவம் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து நாமக்கல் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அளவுக்கு அதிகமாக கிராவல் மண் வெட்டி எடுத்ததை உறுதிப்படுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நாமக்கல் ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கிராவல் மண் வெட்டி எடுத்த தங்கம் என்பவரது மனைவி சித்தேஸ்வரிக்கு ரூ.19.84 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் ஆர்.டி.ஓ மஞ்சுளா உத்தரவிட்டார்.

Tags:    

Similar News