உள்ளூர் செய்திகள்
- முன்னாள் சென்று கொண்டிருந்த ஒரு பிக்கப் வேன் திடீரென சடன் பிரேக் அடித்து உள்ளார்.
- வேன் பின்னால் மோதி 1 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர் மாவட்டம், செவத்தூர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த மோகன் (வயது38). இவரது மனைவி சங்கீதா (32). இவர்களுக்கு ஒரு வயதில் மிதுன்யா என்ற ஒரு வயது குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 20-ம் தேதி ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை மேலுமலை பி.ஜி.துர்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த ஒரு பிக்கப் வேன் திடீரென சடன் பிரேக் அடித்து உள்ளார்.
இதில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் வேன் பின்னால் மோதி 1 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
மேலும் கணவன், மனைவி இருவரும் காயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து சூளகிரி போலீசார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.