உள்ளூர் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்றதாக கைது செய்யப்பட்ட வியாபாரிக்கு கொரோனா பாதிப்பு
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
- மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி பெருமாள் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சிவகுமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
அதை தொடர்ந்து சிவக்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிவகுமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகுமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட உடன், அவரை கைது செய்த போலீசாரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.