உள்ளூர் செய்திகள்

பவ்டா மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் அனுமதி கடிதத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் பவ்டா நிதி நிறுவன நிர்வாகிகளிடம் வழங்கினார். 

பவ்டா சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.9.30 கோடி கடனுக்கான அனுமதி கடிதம்:மத்திய நிதி மந்திரி வழங்கினார்

Published On 2023-07-09 07:49 GMT   |   Update On 2023-07-09 07:49 GMT
  • முதுநிலை பொது மேலாளர் சாந்தாராம் ஆகியோரிடம் ரூ. 9.30 கோடிக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.
  • மண்டல பொறுப்பாளர் சதீஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.

விழுப்புரம்:

புதுவை அரசு சார்பில் ரூ.2638 கோடி கடன் 1.42 லட்சப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தாகூர் அரசு கலைக் கல்லூரியில் நடந்த விழாவிற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமை தாங்கினார். இதில் பாரத ஸ்டேட் வங்கி மூலம் புதுவையைச் சுற்றியுள்ள 141 சுய உதவிக் குழுக்களின் 1672 உறுப்பி னர்களுக்கு பவ்டா நிதி நிறுவன மேலாண்மை இயக்குநர் செ.ஜாஸ்லின் தம்பி, முதுநிலை பொது மேலாளர் சாந்தாராம் ஆகியோரிடம் ரூ. 9.30 கோடிக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.

இந்த கடிதம் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொது மேலாளர் ரவி ரஞ்சன், துணை பொது மேலாளர் ஜனதீஸ்வர் காரி, துணை பொது மேலாளர் கல்பனா முதலியார், சேலம், மண்டல பொறுப்பாளர் சதீஷ் பாபு ஆகியோர் முன்னிலையில்  வழங்கப்பட்டது.பவ்டா நிதி நிறுவனத்தின் சார்பில் முதுநிலை உதவிப் பொது மேலாளர் சிவராஜ், உதவிப் பொது மேலாளர் மகேஷ்வரி, முதுநிலை உதவிப் பொது மேலாளர் சங்கர், உதவிப் பொது மேலாளர்கள் பிரேம்குமார், கார்திக்கேயன், கிளை மேலாளர்கள் பிரபாவதி, முருகன், முருகேஷ், ஹரி கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News