உள்ளூர் செய்திகள்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சட்ட விரோதமாக மது விற்ற 9 பேர் கைது

Published On 2022-10-03 13:09 IST   |   Update On 2022-10-03 13:09:00 IST
  • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவ தும் டாஸ்மாக் மதுபான கடை களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
  • அவர்களிடம் இருந்து மொத்தம் 85 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பரமத்திவேலூர்:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவ தும் டாஸ்மாக் மதுபான கடை களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வேலூர், ஜேடர்பாளையம்,பரமத்தி, வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதாக பரமத்தி வேலூர் காவல்துணை கண்கா ணிப்பாளர் கலையரசனுக்கு தகவலுக்கு கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்படி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள குமரவேல்பா ளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 48), புதுச்சத்திரம் அருகே உள்ள ஏழூர்புதுப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (62),பொம்மம்பட்டி யைச் சேர்ந்த கருணாநிதி (42), வேலூர் அருகே உள்ள பொத்தனூரைச் சேர்ந்த குமரவேல் (40),வெங்கரை அண்ணாநகரைச் சேர்ந்த ல்ட்சுமணன் (27), ஜேடர்பாளையம் அருகே உள்ள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் (37), எஸ்.வாழவந்தி அருகே உள்ள வள்ளியப்பம்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (47), பரமத்தியைச் சேர்ந்த விஜயகுமார் (27), வேலாண்டிபாளையச்சேர்ந்த வெங்கடாசலம் (37) ஆகிய 9 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து மொத்தம் 85 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News