உள்ளூர் செய்திகள்
எலவனாசூர்கோட்டையில் அடுத்தடுத்த 8 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை
- 8 கடைகளில் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்குள்ள கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
- அதில் கிடைத்த வீடியோவை வைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் திருக்கோவிலூர் சாலையில் உள்ள எலக்ட்ரிக்கல் பெயிண்ட் கடை, உணவகம், செருப்பு கடை, டீக்கடை உள்ளிட்ட 8 கடைகளில் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்குள்ள கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருட்டு சம்பவம் சம்பந்தமாக சி.சி.டி.வி. காட்சி ஏதேனும் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த வீடியோவை வைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்