உள்ளூர் செய்திகள்

தேசிய திறனறி தேர்வை 7,514 பேர் எழுதினர்

Published On 2023-02-26 09:39 GMT   |   Update On 2023-02-26 09:39 GMT
  • மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
  • 183 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை.

கிருஷ்ணகிரி, 

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தில் (என்.எம்.எம்.எஸ்.,) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

அதற்காக ஆண்டுதோறும், நாடு முழுவதும் தேர்வு நடத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி, தமிழகத்தில் 6,695 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ்-2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த இந்த தேர்வு கிருஷ்ணகிரி, ஓசூர் கல்வி மாவட்டங்களில் 27 தேர்வு மையங்களில் நடந்தப்பட்டது.

இதற்கு விண்ணப்பித்திருந்த தகுதியான 7,697 மாணவ, மாணவிகளில் 7,514 மாணவ, மாணவிகள் தேர்வினை எழுதினர். 183 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை.

Tags:    

Similar News