உள்ளூர் செய்திகள்

கோவையில் இருந்து5 மாதங்களில் 7,382 விமானங்கள் இயக்கம்

Published On 2022-10-12 09:23 GMT   |   Update On 2022-10-12 09:23 GMT
  • இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 1,460 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையரகம் தெரிவித்துள்ளது.
  • கோவை மட்டுமின்றி நாடு முழு வதும் விமான போக்குவரத்தில் நிலையான வளர்ச்சி காணப்படுகிறது.

கோவை

கொரோனா தொற்று பரவல் ஏற்படுத்திய பாதி ப்பில் இருந்து கடந்த சில மாதங்களாக கோவையில் விமான போ க்குவரத்து மெள்ள மீண்டுவர தொடங்கி உள்ளது.

கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளி நாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்க ப்பட்டு வருகிறது. இதன் மூலம் நூற்றுக்க ணக்கான பயணிகள் மற்றும் தொழில் தீறையினர் பயன் அடைந்து வருகின்றனர். தற்போது தினமும் 24 விமா னங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2021 ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான கால கட்டத்தில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 3,127 விமானங்களும், சர்வதேச பிரிவில் 131 விமானங்களும் என 3,258 விமானங்கள் மட்டு மே இயக்கப்பட்டன. இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையில் 5 மாதத்தில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 6,862 விமானங்களும், சர்வதேச பிரிவில் 520 விமானங்களும் என 7,382 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 1,460 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, கோவை மட்டுமின்றி நாடு முழு வதும் விமான போக்குவரத்தில் நிலை யான வளர்ச்சி காணப்படுகிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ். புத்தாண்டு என விழாகாலம் வரவிருப்பதால் விமானங்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கையும் எதிர்வரும் மாதங்களில் பல மடங்கு அதிகரிக்கும் என்றனர்.

 

Tags:    

Similar News