பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
- ஒரு புளியந்தோப்பில் 25 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது.
- கைதான அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனம் மற்றும் 18,500 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக டி.எஸ்.பி. பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் வடுகனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு புளியந்தோப்பில் 25 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது. இதில் பலரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அதில் திருப்பத்தூர் மாவட்டம், குழிச்சி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது31), செவ்வாரப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம், மத்தூர் அருகேயுள்ள கவுண்டனூரை சேர்ந்த பரமசிவம், சாமல்பட்டி அருகேயுள்ள பரசனூரை சேர்ந்த வீரசோர், மத்தூர் அடுத்துள்ள கமலாபுரத்தை சேர்ந்த மணிகண்டன், திருப்பத்தூர் மாவட்டம், இளவம்பட்டியை சேர்ந்த திருஞானம், மத்தூர் அருகேயுள்ள மணிகண்டன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனம் மற்றும் 18,500 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சாமல்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.