உள்ளூர் செய்திகள்

எதியோப்பியா உணவு மற்றும் மருந்து ஆணைய அதிகாரிகளுக்கு 7 நாட்கள் பயிற்சி

Published On 2023-02-02 09:22 GMT   |   Update On 2023-02-02 09:22 GMT
  • 9 பிரதிநிதிகள் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.
  • மேம்படுத்தப்பட்ட கருவிகளில் பயிச்சி பெற்றனர்.

ஊட்டி,

எத்தியோப்பியன் உணவு மற்றும் மருந்து ஆணைய அதிகாரிகளுக்கான 7 நாட்கள் பயிற்சித் திட்டம், ஜே.எஸ்.எஸ்.உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி குழுமம் சார்பாக ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரியில் ஜனவரி 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெற்றது.

எத்தியோப்பியன் உணவு மற்றும் மருந்து ஆணையத்தின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் உணவுக்கான தரக்கட்டுப்பாடு வேதியியலாளர், மருந்துகள் மற்றும், ஒழுங்குமுறை தணிக்கையாளர்கள் , உணவு ஆய்வாளர்கள் மற்றும் நுண்ணுயிரியலாளர்கள் என சுமார் 9 பிரதிநிதிகள் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.இந்த பிரதிநிதிகளை கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.பி தனபால், கல்லூரியின் பேராசிரியர் முனைவர் எஸ்.என் மெய்யநாதன் மற்றும் இணைப் பேராசிரியர் டாக்டர்.ஜி.என்.கே.கணேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

பயிற்சித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர்கள் கே கௌதமராஜன், என் கிருஷ்ணவேணி, ஆர் ராஜேஷ்குமார் ஆகியோர் பயிற்சி குறித்து பிரதிநிதிகளுக்கு விளக்கினர்கள்.

இந்த பிரதிநிதிகள் மேம்பட்ட பகுப்பாய்வு நுட்பங்களான உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடுகள் அதன் ஆய்வுகள், உணவுக்கான தரக்கட்டுப்பாடு வேதியியல் ஆராய்ச்சி, மருந்துகள் மற்றும் ஒழுங்குமுறை தணிக்கை, உணவு நுண்ணுயிரி ஆய்வு என அனைத்து முக்கிய பகுதிகளிலிலுள்ள மேம்படுத்தப்பட்ட கருவிகளில் பயிச்சி பெற்றனர்.

Tags:    

Similar News