உள்ளூர் செய்திகள்

63 நாயன்மார் சிலைகள் வைக்கும்பணி நடப்பதை படத்தில் காணலாம்.

7-ந்தேதி கும்பாபிசேகம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் 54 யாக குண்டங்கள் அமைப்பு

Published On 2022-08-22 09:45 GMT   |   Update On 2022-08-22 09:45 GMT
  • திருப்பணி நடந்து, இறுதிக்கட்ட நிலையில் உள்ளன. தற்போது தரைத்தள சீரமைப்பு, யாக சாலை பணி நடக்கிறது.
  • அனைத்து பணியும் முடிந்து கும்பாபிஷேகம் நடக்கும்’ என்றனர்.

சேலம்:

சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இந்த கோவிலில் சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மனு டன் அருள்பாலிக்கிறார். சேலம், சுகவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்கு, 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, திருப்பணி நடந்து, இறுதிக்கட்ட நிலையில் உள்ளன. தற்போது தரைத்தள சீரமைப்பு, யாக சாலை பணி நடக்கிறது. இதை தொடர்ந்து, வருகிற 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

இதற்கான யாகசாலை பூஜைகள் 1-ந்தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி, கணபதி ஹோமம், யாகசாலை நிர்மானம், யாக பூஜை, சாமிக்கு அஷ்டபந்தனம் உள்ளிட்டவை நடக்க உள்ளது. 7-ந்தேதி காலை, 6.30 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், 9.30 மணிக்கு அனைத்து விமா னங்கள், ராஜகோபுரங்கள், மூலஸ்தான சாமி, அம்மன், விநாயகர், சுப்ரமணியர் கலசங்கள் புறப்பாடு நடக்க உள்ளது. 10.50 மணிக்கு விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், 11.15 மணிக்கு சுகவனேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகை அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. தொடர்ந்து, அபிஷேகம், தீபாராதனை, திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடக்கும்.

இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''சுகவனேஸ்வரர் கோவிலில் திருப்பணிக்கு, ரூ.98.50 லட்சம், சுற்றுச்சுவர் கட்ட ரூ.7.90 லட்சம் என, ஒரு கோடியே, 6 லட்சத்து, 40 ஆயிரம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 90 சதவீத பணி முடிந்துள்ளது. சுகவனேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகை, விநாயகர், சுப்ரமணியர், நடராஜர், பரிவாரங்களுக்கு, 54 குண்டங்கள் அமைத்து யாகம் நடக்க உள்ளது. 7-ந்தேதிக்குள் அனைத்து பணியும் முடிந்து கும்பாபிஷேகம் நடக்கும்' என்றனர்.

Tags:    

Similar News