உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தீபக் ஜேக்கப்.

தஞ்சை மாவட்டத்தில் 68 கால்நடைகள் ஏலம்

Published On 2023-08-11 09:55 GMT   |   Update On 2023-08-11 09:55 GMT
  • வருகிற 17-ந்தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை பண்ணை வளாகத்தில் ஏலமிடப்படுகிறது.
  • கலந்து கொள்பவர்களின் பெயர் மற்றும் முகவரி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள உயிரின கால்நடை பெருக்கு பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 12 பொலி காளைகள், வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணி வரை பண்ணை வளாகத்தில் ஏலமிடப்படுகிறது.

ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் டேவ ணித்தொகை ரூ.10 ஆயிரத்துக்கு தேசியமய மாக்கப்பட்ட வங்கியில் துணை இயக்குனர், உயிரின கால்நடை பெருக்கு பண்ணை, ஈச்சங்கோட்டை என்ற பெயருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது அதற்கு பின்னர் பெறப்பட்ட வங்கி வரைவோலை மற்றும் ரேஷன்கர்டு, ஆதார்கார்டு நகல் ஆகியவற்றை வருகிற 16-ந்தேதி காலை 11 மணி முதல் 5 மணிக்குள் அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதே போல் நடுவர் கால்நடை பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 56 கால்நடைகள் வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஏலமிடப்படுகிறது.

ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முன்வைப்புத்தொகையாக ரூ.20 ஆயிரத்துக்கு கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர், கால்நடை பண்ணை, நடுவூர் என்ற பெயரில் பண்ணையின் வங்கி கணக்குவைத்து இருக்கும் ஒரத்தநாடு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மாற்றத்தக்க வகையில் பெறப்படும் வங்கி வரைவோலை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஏலத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர் மற்றும் முகவரி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும். ஏலத்தொகை செலுத்து பவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனும திக்கப்படுவார்கள்.

மற்றயாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள், கால்நடைகளை ஏலம் எடுத்தவர் முழு ஏலத்தொகையினை செலுத்திய பின்னரே அடுத்த ஏலம் கோர அனுமதிக்கப்ப டுவர்.

ஏலம் முடிந்தவுடன் முழுத்தொகையையும் உடனே செலுத்தி கால்ந டைகளை எடுத்துச்செல்ல வேண்டும்.

தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களல் ஏலத்தை நிறுத்தவோ, தள்ளி வைக்கவோ துணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு.

மேற்கண்ட தகவலை கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News