உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல்லில் 6 வயது சிறுமிக்கு டெங்கு அறிகுறி -அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2023-10-20 11:35 IST   |   Update On 2023-10-20 11:35:00 IST
  • திண்டுக்கல் மாவட்டத்தில குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சலால் பாதி க்கப்பட்டு வருகின்றனர்.
  • 6 வயது சிறுமி கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பருவமழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகள், காலியிடங்கள் ஆகியவற்றில் மழை நீர் தேங்கி வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது.

இதனால் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சலால் பாதி க்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒய்.எம்.ஆர் பட்டியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ஆஸ்ப த்திரியில் பரிசோதனை செய்ததில் டெங்கு அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து அந்த பகுதியில் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் படி மருத்துவ குழுவினர் முகாமிட்டு வீடு வீடாக சென்று மருத்தவ பரிசோதனை நடத்தி வருகின்றனர். சிறுமி தனியார் தொடக்கப்பள்ளி யில் 1ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்து மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்ப ட்டது. மேலும் காய்ச்சல், சளி இருந்தால் குழந்தை களை மருத்துவமனையில் பரிசோதனை செய்ய ஆசிரியர்களுக்கு மருத்துவ குழுவினர் அறிவுறுத்தினர்.

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் காய்ச்சலுக்கு தனி பிரிவு தொடங்கப்பட்டு, தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனையில் 3 இடங்களில் சிறப்பு காய்ச்சல் பிரிவு தொடங்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தினந்தோறும் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News