சாலையில் அமர்ந்து போராடடத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
கிருஷ்ணகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட 58 பேர் கைது
- பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக கவர்னரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
- பா.ஜ.க தலைவர் சிவபிரகாஷ் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்த குவிந்தனர்.
கிருஷ்ணகிரி,
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தி.மு.க., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அவரது பேச்சு இந்தியா முழுவதும் கடும் சர்ச்சைக்குள்ளானது. பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சிகளும், தி.மு.க.,வின் தோழமைக் கட்சிகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். அதே போல், சனாதன ஒழிப்பு மாநாட்டில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். எனவே அவரையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக கவர்னரிடம் புகார் மனு அளித்துள்ளார். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜ.க-வினர் ஹிந்து சமய அறநிலை யத்துறை அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்–டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, கிருஷ்ண–கிரியில், ராயக்கோட்டை சாலையில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு கிழக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சிவபிரகாஷ் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்த குவிந்தனர். ஆர்ப்பாட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் துணை போலீஸ் சூப்பி ரண்டு தமிழரசி தலைமையி லான போலீசார், ஆர்ப்பாட்–டத்திற்கு அனுமதி இல்லை யெனக் கூறி அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர்.
ஜனநாயக நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏன் அனுமதி இல்லை எனக் கூறிய பா.ஜ.க-வினர் போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு சிலர் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி னர். இதில், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் கலைகோபி, பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் முருகேசன், நகர தலைவர் சங்கர் உள்பட 58 பேரை போலீசார் கைது செய்தனர்.