உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் 55 ஏரிகள் முழுமையாக நிரம்பின

Published On 2022-12-15 15:46 IST   |   Update On 2022-12-15 15:46:00 IST
  • சேலம் மாவட்டத்தில் நீர்வள துறையின் கட்டுப்பாட்டில் 88 ஏரிகள் உள்ளன.
  • 8 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியிருந்தன. 15 ஏரிகள் வறண்ட நிலையில் இருந்தன.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் நீர்வள துறையின் கட்டுப்பாட்டில் 88 ஏரிகள் உள்ளன. தென்மேற்கு பருவமழை காலம் நிலவிய ஆகஸ்ட் மாதத்தில் 88 ஏரிகளில் கன்னங்குறிச்சி மூக்கனேரி, பைரோஜி ஏரி, கமலாபுரம் பெரிய ஏரி, கமலாபுரம் சின்ன ஏரி,கொண்டலாம்பட்டி ஏரி, ஆத்தூர் புது ஏரி, முட்டல் ஏரி, மணிவிழுந்தான் ஏரி,

தேவியாக்குறிச்சி ஏரி, செந்தாரப்பட்டி ஏரி உள்பட

29 ஏரிகள் முழுமையாக நிரம்பின. அபினவம் ஏரி, சின்ன சமுத்திரம் ஏரி உள்பட 8 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியிருந்தன. 15 ஏரிகள் வறண்ட நிலையில் இருந்தன.

தற்போது வடகிழக்கு பருவமழை காலம் காரண

மாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாண்டஸ் புயல் கரையை கடந்த பின்னர், சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த 3 நாட்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகளில் வரத்து, கால்வாய்களில் நீரோட்டம் அதிகரித்து உள்ளது.

இதையடுத்து 88 ஏரிக ளில், 55 ஏரிகள் முழுமையாக நிரம்பி அவற்றிலிருந்து உபரி நீர் வெளியேறும் நிலையில் உள்ளது. 75 முதல் 99 சதவீதம் வரை நீர் நிரம்பிய நிலையில் 4 ஏரிகள் உள்ளன.

50 முதல் 74 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பிய நிலையில் 8 ஏரிகள் உள்ளன. ஆறு ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் மேல் 49 சதவீதம் வரை தண்ணீர் உள்ளது. 25% குறைவாக 4 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. 11 ஏரிகள் இன்னும் வறண்ட நிலையில் தான் காட்சியளிக்கின்றன. வடகி ழக்கு பருவமழை காலம் இன்னும் நீடிப்பதால் 50% வரை நீர்மட்டம் எட்டி உள்ள ஏரிகள் விரைவில் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த அளவு நீர் இருப்பு உள்ள ஏரிகளும், வறண்ட நிலையில் உள்ள ஏரிகளும், வடகிழக்கு பருவமழை காலத்திற்குள் நிரம்ப வேண்டும் என்றும், அதற்கான ஆக்கிர மிப்புகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News