உள்ளூர் செய்திகள்

நாகையில் அம்மனுக்கு 508 தக்காளிமாலை அணிவித்து சிறப்பு வழிபாடுட்டனர்.

தக்காளி விலை குறைய வேண்டி அம்மனுக்கு 508 தக்காளி மாலை

Published On 2023-08-03 15:12 IST   |   Update On 2023-08-03 15:12:00 IST
  • தக்காளி விலை உயர்வு அடித்தட்டு மக்களை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • அம்மனுக்கும் 508 தக்காளிகள் கொண்டு மாலை அணிவிக்கப்பட்டது

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள காருக்குடி பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோவில் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தில் ஆடி மாத பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு யாக பூஜை வெகு நடைபெற்றது.

திருமணத்தடை குழந்தை பாக்கியம் கல்வி மற்றும் செல்வம் ஆகியவை பெறுக வேண்டி சிறப்பு பரிகார பூஜைக்கு பின்னர் கடம் புறப்பாடாகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர், தற்போது வரலாறு காணாத அளவிற்கு கிடு கிடுவென உயர்ந்து வரும் தக்காளி விலையால் அடித்தட்டு ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தக்காளியின் விலை குறைய வேண்டி, அம்மனுக்கும், மதுரை வீரனுக்கும் தனித்தனியே 508 தக்காளிகள் கொண்டு மாலை அணிவித்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

மலர் மாலை எலுமிச்சை பழம் மாலை உடன் சேர்த்து தக்காளியையும் மாலையாக அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது அதை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதில் நாகை திருவாரூர் காரைக்கால் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News