உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசியகாட்சி. அருகில் சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர் புகழ் காந்தி உள்ளார்.

சங்கரன்கோவில் தொகுதியில் 50 ஆயிரம் உறுப்பினர்களை புதிதாக சேர்க்க வேண்டும்- ராஜா எம்.எல்.ஏ. பேச்சு

Published On 2023-04-03 14:52 IST   |   Update On 2023-04-03 14:52:00 IST
  • கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.
  • 50 ஆயிரம் உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர பேரூர் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள ஜெய் சாந்தி மஹாலில் நடந்தது.

இதில் பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாவட்ட அவை தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர் மாநில அயலக அணி இணைச் செயலாளர் புகழ்காந்தி, வாசுதேவநல்லூர் தொகுதி பொறுப்பாளர் நல்லசேதுபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணை செயலாளர் புனிதா, ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தீர்மானங்களை வாசித்தார்.

இதில் வளர்ச்சிப் பணிகளுக்காகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் விதத்தில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை அந்தந்த பகுதி செயல் வீரர்கள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும், தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க.வில் 1 கோடி உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற அறிவி ப்பின்படி சங்கரன்கோவில் தொகுதியில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், இந்தியாவை வியக்கும் வகையில் ஆட்சி செய்த கலைஞர் நூற்றாண்டு விழாவை போற்றும் விதமாக தி.மு.க. தலைவர் அறிவித்தது போல தி.மு.க.வில் புதிதாக 1 கோடி பேர்களை இணைக்க வேண்டும் என முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை துரிதமாக செயல்பட்டு முடிக்க வேண்டும், பூத் கமிட்டி அமைக்கும் பணியையும் விரைவாக முடிக்க வேண்டும் . தற்போது தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சரின் சாதனைகளை அனைவரும் எடுத்து கூறி புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்.

தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் மற்றும் மகளிர் திட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் வளர்ச்சி பணிகளுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார். பெண்களின் வளர்ச்சிக்கு பாடுபடும் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதை எடுத்து கூறி புதிய உறுப்பினர்களை குறிப்பாக இளைஞர் மற்றும் இளம் பெண்களை சேர்க்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்றார்.

இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, மகேஸ்வரி, பராசக்தி, சங்கரன்கோவில் நகரத் துணைச் செயலாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன்மற்றும் ஒன்றிய நகர, பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News