உள்ளூர் செய்திகள்

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்கிடம் தேசிய கொடி வழங்கப்பட்ட காட்சி.

சுதந்திர தின அமுதப்பெருவிழா: பொதுமக்களுக்கு விநியோகிக்க 5 ஆயிரம் தேசிய கொடிகள்

Published On 2022-08-12 08:58 GMT   |   Update On 2022-08-12 08:58 GMT
  • சுதந்திரத்தின் 75-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் சுதந்திர அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ஆகஸ்டு 11 முதல் 17 வரை சுதந்திர வாரமாக கொண்டாட தமிழகஉத்தரவிட்டு உள்ளது.
  • 5000 தேசிய கொடிகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்கிடம் இன்று வழங்கினார்கள்.

நாமக்கல்:

வீடுகளில் இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் சுதந்திர அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ஆகஸ்டு 11 முதல் 17 வரை சுதந்திர வாரமாக கொண்டாட தமிழகஉத்தரவிட்டு உள்ளது.

இதனையொட்டி நாளை முதல் 15-ந்ந்தேதி வரை 3 நாட்கள் அனைத்து வீடுகளிலும் கொடியேற்ற நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் குறைந்த விலையில் தரமான தேசிய கொடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தனியார் கல்லூரிகள், அறக்கட்டளை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தனிநபர்கள் மூலம் தேசியக்கொடிகள் பொதுமக்களுக்கு நன்கொடையாக வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியன் வங்கியின் உதவி பொது மேலாளர் சசிரேகா மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதிஷ்குமார் ஆகியோர் 5000 தேசிய கொடிகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்கிடம் இன்று வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் கலையரசு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News