உள்ளூர் செய்திகள்

கண்டெடுக்கப்பட்ட பெருமாள் சிலை.

5 அடி உயர பெருமாள் சிலை கண்டெடுப்பு

Published On 2023-07-19 09:51 GMT   |   Update On 2023-07-19 09:51 GMT
  • பழமையான பெருமாள் சாமி கருங்கல் சிலை இருப்பது தெரியவந்தது.
  • அப்பகுதி மக்கள் பூக்கள் தூவி வழிபட்டனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நெடுவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட செறுடம்பனூர் கிராமத்தில் சிங்கமட வாய்க்கால் தூர்வாரும் பணி நடக்கிறது.

பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடந்த போது சத்தம் கேட்டது.

இதைத் தொடர்ந்து இந்த இடத்தை தேண்டிப் பார்த்தனர். அப்போது அங்கு சுமார் , 5 அடி உயரத்தில் பழமையான பெருமாள் சாமி கருங்கல் சிலை என்பது தெரியவந்தது.

உடனே அப்பகுதி மக்கள் பூக்கள் வைத்து வழிபட்டனர்.

தகவலறிந்த தரங்கம்பாடி தாசில்தார் சரணவணன் மற்றும் பொறையார் போலீசார் அங்கே சென்று சாமி சிலையை பாதுகாப்பாக தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இந்த பகுதியில் பழங்காலத்தில் கோவில் ஏதாவது இருந்ததா அல்லது மழை வெள்ளத்தில் சிலை அடித்து வரப்பட்டதா என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News