உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் இ.பெரியசாமி கலந்துகொண்டார்.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு குப்பை சேகரிக்க 5 பேட்டரி வாகனங்கள்

Published On 2023-09-23 13:09 IST   |   Update On 2023-09-23 13:09:00 IST
  • அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேட்டரி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • தொடர்ந்து மாநகராட்சி மூலம் 1112 பணியாளர்களுக்கு சேமநல நிதிக்கான வட்டித்தொகை ரூ.2 கோடியே 10 லட்சம் காசோலையை வழங்கினார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாநகராட்சி பொது சுகாதார பிரிவுக்கு வீடுகள் தோறும் குப்பைகள் சேகரிக்க ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 5 பேட்டரி வாகனங்கள், சாலையில் மண் அகற்றும் கருவிகள் மற்றும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் பெறுவதற்கு 600 பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேட்டரி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநகராட்சி மூலம் 1112 பணியாளர்களுக்கு சேமநல நிதிக்கான வட்டித்தொகை ரூ.2 கோடியே 10 லட்சம் காசோலையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் செபாஸ்டின், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பொன்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News