உள்ளூர் செய்திகள்

புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-10-14 15:10 IST   |   Update On 2023-10-14 15:10:00 IST
  • தருமபுரி மாவட்ட பெருமாள் கோவில்களில் புரட்டாசி 4-வது சனிக்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  • பக்தர்கள் வரிசையில் சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாத சனிக்கி–ழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்துவது வழக்கமாகும். அதன்படி இந்தாண்டு புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி தருமபுரி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய ஸ்ரீ பரவாசு தேவ பெருமாள் கோவிலில் சாமிக்கு, தருமபுரி குமாரசா–மிப்பேட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமி மற்றும் கருடாழ்வாருக்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், சோகத்தூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராயப் பெருமாள் சாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தருமபுரி எஸ்.வி. சாலையில் உள்ள அபாய ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.

 இதேபோன்று மணி யம்பாடி ஸ்ரீ வெங்கட் ரமண சாமி கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆரா தனை வழிபாடுகள் நடந்தது.

தருமபுரி அருகே புலிக்க ரையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் சாமி கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றது.

பழைய தருமபுரி அடுத்த வரதகுப்பத்தில் உள்ள ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி கோவிலில் கடந்த புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் செட்டிக்கரை ஸ்ரீ பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் சாமி கோவில், கம்பைநல்லூர் ஸ்ரீ லட்சுமி நாராயண சாமி கோவில், தென்க ரைக்கோட்டை பட்டாபி ராமர் சாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது.

இதேபோன்று மூக்கனூர் அக்கமணஹள்ளி ஸ்ரீ ஆதிமூல வெங்கட்ரமண சாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சாமிக்கு தங்கக்கவசம் சாத்நப்பட்டு மகா தீபாரதனை நடை பெற்றது.

விழாவையையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.இந்த வழிபாட்டில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தருமபுரி அருகே தோக்கம்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியில் அமைந்துள்ள 300 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ சுயம்பு சென்ராய பெருமாள் சாமி கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, காரி மங்கலம், பாப்பாரப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், ஏரியூர், நல்லம்பள்ளி, கடத்தூர், மாரண்டஅள்ளி, பொம்மிடி உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 

Similar News