உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் தேசிய திறனாய்வு தேர்வு 4,607 மாணவ, மாணவியர் பங்கேற்பு

Published On 2023-02-26 08:47 GMT   |   Update On 2023-02-26 08:47 GMT
  • மத்திய அரசு சார்பில், ஆண்டு தோறும், தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
  • இதில் தேர்ச்சி பெறும், ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் 4,607 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.

நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள், இடைநிற்றலை கைவிட்டு, உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும், மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திலும், மத்திய அரசு சார்பில், ஆண்டு தோறும், தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறும், ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில், பள்ளிக்கல்வி த்து றை சார்பில், ஆண்டு தோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தேர்வை எழுத தகுதியானவர்கள். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவியருக்கு, மாதம் தோறும் ரூ. 1,000 வீதம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

இந்த உதவித்தொகை, சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் மாண வர்களுக்கு 9 முதல் பிளஸ் 2 வரை 4 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 48 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி, 2022-–23-ம் கல்வி ஆண்டில், அரசு, அரசு உதவி பெறும், மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டத்தில், 15 மையங்க ளில் இன்று இத்தேர்வு நடைபெற்றது. அதில், மொத்தம் 4,607 மாணவ, மாணவியர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவுகள் வெளி யான பிறகு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.


Tags:    

Similar News