உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பெரியகுளத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

Published On 2022-11-12 05:13 GMT   |   Update On 2022-11-12 05:13 GMT
  • பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
  • தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரியகுளம்:

பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பெரியகுளம் வடகரை புதிய பஸ்நிலையம் பகுதியில் அதேபகுதிையசேர்ந்த சூர்யா மற்றும் பசீர்அகமது ஆகியோர் குடிபோதையில் அங்கிருந்த பயணியிடம் செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

இதேபோல் வடகரையை சேர்ந்த மரியபால்தினகரன், மற்றும் ஜோசப் கார்த்திக் ஆகியோர் சேர்ந்து அரண்மனைத்தெருவில் உள்ள மாரிச்செல்வம் என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு அவரது செல்போன் மற்றும் பணத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் துரத்தி பிடித்து கைது செய்தனர். இவர்கள் 4 பேரிடமும் விசாரணை செய்ததில் அனைவரும் நண்பர்கள் என தெரியவந்தது.

மேலும் 2 பேராக வெவ்வேறு பகுதிகளில் சேர்ந்து தொடர்ந்து இதுபோன்ற வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக இரவில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து இவர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

இதனைதொடர்ந்து போலீசார் அவர்கள் 4 ேபரையும் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன்களையும், பறிமுதல் செய்தனர். பின்னர் அவ்ர்கள் பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News