உள்ளூர் செய்திகள்

குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய மருத்துவக் குழு 3-வது நாளாக ஆய்வு

Published On 2023-03-02 09:05 GMT   |   Update On 2023-03-02 09:05 GMT
  • லாலி மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பிரிவுகள் இயங்கி வருகின்றன.
  • அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் மத்தியக் குழுவினா் சிறப்பு ஆய்வு செய்துள்ளனா்.

ஊட்டி,

குன்னூரில் உள்ள அரசு லாலி மருத்துவமனை நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இந்த அரசு லாலி மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்த மருத்துவமனையில் மத்திய குழு மருத்துவா்கள் அரவிந்த் ஜெயின், ரெஜி குமாா், சஞ்சுலால் பாா் யுவா ஆகியோா் அடங்கிய குழுவினா் கடந்த 2 நாள்களாக ஆய்வு செய்து வருகின்றனா். மூன்றாவது நாளாக நேற்றும் ஆய்வு மேற்கொண்டனா்.

இது குறித்து மருத்துவா்கள் கூறுகையில், அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் மத்தியக் குழுவினா் சிறப்பு ஆய்வு செய்துள்ளனா். மருத்துவமனையை மேம்படுத்துதல், வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசித்துள்ளனா். இது குறித்த ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் வழங்குவா் என்றனா்.

ஆய்வின்போது மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் பழனிசாமி, மருத்துவமனை முதன்மை மருத்துவா் விஸ்வநாதன், மருத்துவர் ரமேஷ் ஆகியோா் உடன் இருந்தனா். 

Tags:    

Similar News