கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 3.8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- 76 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததை கண்ட றிந்தனர்.
- அரிசியை, தமிழ்நாடு வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.
வாணியம்பாடியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு கடத்த முயன்ற 3.8 டன் ரேஷன் அரிசியை, கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படை தாசில்தார் சின்னசாமி தலைமையில் வருவாய் ஆய்வாளர் துரைமுருகன், சூளகிரி தனி வருவாய் ஆய்வாளர் சூர்யா உட்பட கொண்ட குழுவினர் பாகலூர் அருகே ரோந்து மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு கிடமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த நேரம் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடினார். இதையடுத்து வாகனத்தை சோதனை செய்த போது அதில் வாகனத்தில் 50 கிலோ எடை கொண்ட 76 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததை கண்ட றிந்தனர்.
மேலும், வாணியம்பாடி அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடு, வீடாக ரேஷன் அரிசியை குறைந்து விலைக்கு வாங்கி, கர்நாடகா மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்திச் சென்றது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட 3.8 டன் ரேஷன் அரிசியை, தமிழ்நாடு வாணிப கழக கிடங்கிலும், வாகனம் உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோ டிய வாகன டிரைவர், வாகனத்தின் உரிமையாளர் மற்றும் அரிசி சேகரித்து தரும் முகவர்களை தேடி வருகின்றனர்.