உள்ளூர் செய்திகள்

வடவள்ளியில் 35 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தம்

Published On 2022-08-06 10:13 GMT   |   Update On 2022-08-06 10:13 GMT
  • மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் சி.சி.டி.வி காமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • நியூ தில்லை நகர் பகுதியில் 4 வீதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வடவள்ளி

கோவை வடவள்ளி பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் சி.சி.டி.வி காமிரா பொருத்த வடவள்ளி போலீசார் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதன் ஒரு பகுதியாக தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் வடவள்ளி நியூ தில்லை நகர் பகுதியில் 4 வீதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கண்காணிப்பு மையம தமிழக வியாபாரிகள் சம்மேளனம் மீட்டிங் ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து அனைத்து காமிராக்களையும் கண்காணிக்கப்பட உள்ளது.

தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கோவை மாவட்ட தலைமை தலைவர் எஸ்.எம்.முருகன் தலைமையில், பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தலின் படி வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, கண்காணிப்பு காமிராவை திறந்து வைத்தார்.முதற்கட்டமாக 35 காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கோவை மாவட்ட வடவள்ளி கிளை தலைவர் சுந்தரபாண்டியன், பொருளாளர் சேகர் மற்றும் தலைமை பொருளாளர் வெனிஸ், தமிழக வியாபாரிகள் சம்மேளனம் வடவள்ளி கிளை துணைத்தலைவர்கள் செல்வசிங், அர்ஜுனன், ராஜேந்திரன், சாமிநாதன் மற்றும் துணைச் செயலாளர்கள் பாலகிருஷ்ணன், கந்தசாமி, கோவை ஜுடுததேயுஸ், விஜயகுமார், ஆலோசகர்கள் சேர்மதுரை, லியாகத் அலி மற்றும் வடவள்ளி கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News