உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை பயனாளிக்கு கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.

கள்ளக்குறிச்சியில் குறைதீர் முகாமில் பொதுமக்களிடமிருந்து 314 மனுக்கள் பெறப்பட்டது

Published On 2023-08-08 06:56 GMT   |   Update On 2023-08-08 06:56 GMT
  • மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது.
  • 314 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் பெற்றார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். இதில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையில் அடங்கிய 287 மனுக்களும், மாற்றுத்திறனா ளிகளிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது.

மொத்தம் 314 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் பெற்றார். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாரா யணன், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News