உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 31 பேர் கைது

Published On 2023-10-10 15:23 IST   |   Update On 2023-10-10 15:23:00 IST
  • ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செயயப்பட்டது.
  • 11 பேரை கைது செய்த போலீசார், ரூ.1000 பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் கண்கா ணித்தனர்.

அந்த வகையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த–தாக கிருஷ்ணகிரி, குருபரப் பள்ளி, ஓசூர், பாகலூர், சூளகிரி, பேரிகை, ஊத்தங்கரை, நாகரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 26 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செயயப்பட்டது.

இதேபோல தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றதாக கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.700 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் பணம் வைத்து சூதாடியதாக பர்கூர், நாகரசம்பட்டி, கெல மங்கலம், சிங்காரப்பேட்டை பகுதிகளை சேர்ந்த 11 பேரை கைது செய்த போலீசார், ரூ.1000 பறிமுதல் செய்தனர்.

இதே போல மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்தாக பாகலூர், கந்திகுப்பத்தில் தலா ஒருவர் என மொத்தம் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News