உள்ளூர் செய்திகள்

கிராவல் அள்ள பயன்படுத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட பொக்லைன் எந்திரத்தை படத்தில் காணலாம்.

திட்டக்குடி அருகே அனுமதி இன்றி கிராவல்மண் அள்ளிய 3 பேர் கைது

Published On 2022-10-09 08:12 GMT   |   Update On 2022-10-09 08:12 GMT
  • திட்டக்குடி அருகே அனுமதி இன்றி கிராவல்மண் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர் .

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெரங்கியம் ஏரியில் அனுமதி இன்றி கிராவல் அள்ளுவதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை செய்த போது மாணிக்கம் என்பவரது நிலத்திற்கு அனுமதி இன்றி கிராவல் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வம் (31), அவினாஷ் (19), கவியரசன் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் கிராவல் மண்அள்ளுவதற்கு பயன்படுத்திய பதிவு எண் இல்லாத ஜே.சி.பி.,எந்திரம் ஒன்றும், இருசக்கர வாகனம் ஒன்றும், பதிவுகள் இல்லாத கார் ஒன்றும் ஆகிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர் .

Tags:    

Similar News