- வயிற்று வலி ஏற்பட்டதால் மன விரக்கியில் இருந்து வந்துள்ளார்.
- அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சுகர்ணஅள்ளி பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (வயது 20). இவர் ஓசூர் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் பவித்ரா எலி மருந்து குடித்ததால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பவித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திம்மாபுரம் அருகே உள்ள ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது45). ஆட்டோ டிரைவர். குடிப்பழக்கத்தினால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு மனவிரக்தியில் இருந்த சசிகுமார் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மகாராஜா கடை அருகே உள்ள காட்டிநாயனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது75). இவர் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகாராஜா கடை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.