பிளஸ்-2 மாணவன் உள்பட 3 பேர் மாயம்
- கோபித்துக்கொண்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை
- போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள சின்னாளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கண்ணகி (50). கடந்த ஏப்ரல் மாதம் முதல் காணவில்லை என்று பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவரது மகன் தியாகராஜன் தந்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கண்ணகியை தேடி வருகின்றனர்.
இதேபோல தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள சாத்தனூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணப்ப என்ற போர்வெல் ஆ பரேட்டர் குடும்பத்தகராறில் வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பெங்களூருவை சேர்ந்த அவத்து க்குடும்பத்தினர் தந்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
இந்த வகையில் பெங்களூர் ரோடு பகுதியை சேர்ந்த சுதன்குமார் என்பவரது மகன் விஜய்(17) தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதால் வீட்டில் திட்டியுள்ளார். இதையடுத்து விஜய் எங்கோ சென்று விட்டார். இது குறித்து பெறப்பட்ட புகாரின்பேரில் ஹட்கோ போலீ சார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.