உள்ளூர் செய்திகள்

கோவையில் மாணவர்களின் 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு

Published On 2023-05-26 14:41 IST   |   Update On 2023-05-26 14:41:00 IST
  • இன்று காலை 5 மணியளவில் வீட்டு முன்பு இருந்து சத்தம் வந்தது.
  • செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கோவை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ண சாகர் (வயது 22). கன்னியாகுமரியை சேர்ந்தவர் அபிஷ் (20), கதிரவன் (20). இவர்கள் 3 பேரும் மலுமச்சம்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

மாணவர்கள் 3 பேரும் மலுமச்சம்பட்டி அண்ணா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். இவர்கள் கல்லூரிக்கு சென்று வருவதற்கு மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி வந்தனர். கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு திரும்பும் இவர்கள் அங்குள்ள காம்பவுண்டுக்குள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று இரவு மாணவர்கள் வழக்கம் போல மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றனர். இன்று காலை 5 மணியளவில் வீட்டு முன்பு இருந்து சத்தம் வந்தது. உடனடியாக மாணவர்கள் வெளியே வந்து பார்த்தனர்.

அப்போது 3 பேரின் மோட்டார் சைக்கிள்களும் தீ பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. இதனை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயை அணைத்தனர். இருந்த போதிலும் 3 மோட்டார் சைக்கிள்களும் முழுவதுமாக எரிந்து நாசமானது.

இந்த தகவல் கிடைத்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ேரால் கசிவு காரணமாக மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்ததா அல்லது முன் விரோதம் காரணமாக என்ஜினீயரிங் மாணவர்களின் மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்து சென்றார்களா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News