உள்ளூர் செய்திகள்

காயம் அடைந்த 3 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை

Published On 2023-03-13 15:35 IST   |   Update On 2023-03-13 15:35:00 IST
  • காரின் இடுபாடுகளில் சிக்கி பின் பகுதியில் அமர்ந்திருந்த அபிராமி மற்றும் கனிமொழி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்த னர்.
  • தர்மலிங்கம், பானு மதி, வெற்றி மாறன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடை ந்தனர். காரை ஓட்டி வந்த புகழேந்தி காயமின்றி தப்பி னார்.
  • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரண மான காரை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த விக்ரம் சுதாகர் (45) என்பவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

ஈரோடு அருகே உள்ள பெரிய சேமூர் பாரதி நகரை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருடைய மனைவி அபி ராமி (வயது 34). அதே பகுதியை சேர்ந்த அருண் குமார் என்பவரின் மனைவி கனிமொழி (28). இவரும், அபிராமியும் உறவினர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் அபிராமி, கனிமொழி அவர்களது உறவினர்கள் பானுமதி (40). அவரின் கணவர் தர்மலிங் கம் (50). அவருடைய மகன் வெற்றிமாறன் (8) ஆகியோர் ஒரு காரில் பெருந்துறை அருகே ஆயிகவுண்டன் பாளையத்தில் உள்ள உற வினர் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

தர்ம லிங்கத்தின் மற்றொரு மகன் புகழேந்தி (26) என்பவர் காரை ஓட்டினார்.

இவர்கள் வந்த கார் பெருந்துறை தேசிய நெடுஞ் சாலைக்கு வந்ததும் அங்கு இருந்து குன்னத்தூர் ரோடு பிரிவில் செல்லாமல் வழி தவறி நெடுஞ்சாலை யிலேயே விஜயமங்கலம் நோக்கி நேராக சென்று கொண்டு இருந்தனர்.

ஓலப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது பின்னால் வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக புகழேந்தி ஓட்டி வந்த கார் மீது மோதியது.

இதில் புகழேந்தி ஓட்டி வந்த காரின் பின் பகுதி நொறுங்கியது. இதில் காரின் இடுபாடுகளில் சிக்கி பின் பகுதியில் அமர்ந்திருந்த அபிராமி மற்றும் கனிமொழி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்த னர்.

இதில் தர்மலிங்கம், பானு மதி, வெற்றி மாறன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடை ந்தனர். காரை ஓட்டி வந்த புகழேந்தி காயமின்றி தப்பினார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து படுகாயம் அடைந்த 3 பேரை மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அனுமதி க்கப்பட்டனர்.

தொடர்ந்து அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரண மான காரை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த விக்ரம் சுதாகர் (45) என்பவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News