உள்ளூர் செய்திகள்

மது பதுக்கி விற்ற 3 பேர் கைது 247 மது பாட்டில்கள் பறிமுதல்

Published On 2022-08-29 15:36 IST   |   Update On 2022-08-29 15:36:00 IST
  • பரமத்திவேலூர் மற்றும் பாலப்பட்டி பகுதி யில் அனுமதியின்றி திருட்டுத்தன மாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததது.
  • பழைய பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் பாலப்பட்டி பகுதி யில் அனுமதியின்றி திருட்டுத்தன மாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததது.

தகவலின் அடிப்படையில் பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையிலான போலீசார் பரமத்திவேலூர் பழைய பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த கருணாநிதி என்பவரது மகன் ராமச்சந்திரன் (23) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 103 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பரமத்திவேலூர், நான்கு ரோடு, சிவா தியேட்டர் கார்னர், பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த பிச்சைபாண்டி மகன் சரவணன் என்கிற செந்தாமரைக்கண்ணன் (25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 70 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பரமத்தி வேலூர் அருகே எல்லை மேடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடை அருகே அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த கீழ பாலபட்டியைச் சேர்ந்த சதாசிவம் என்ப வரது மகன் நிஷாந்த்(24) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 74 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News