உள்ளூர் செய்திகள்

பாக்கு தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

Published On 2023-10-12 15:45 IST   |   Update On 2023-10-12 15:45:00 IST
  • கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்த 3 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.
  • பாக்குத் தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு முள்ளிக்காடு பகுதியில் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான பாக்கு தோட்டம் உள்ளது. இங்கு கள்ளத்தனமாக கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருப்பதாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் பாக்குதோட்டத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்ட போது பாக்கு தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்த 3 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.

அவர்களை துரத்தி சென்று விரட்டி மடிக்கி பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முள்ளிக்காடு பகுதியை சேர்ந்த மாதையன் (44), சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள சின்னமாங்கோடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (38), ஏற்காடு அடுத்த மாரமங்கலம் அருகே உள்ள குட்டமாத்திக்காடு பகுதியை சேர்ந்த திருமூர்த்தி (23), என்பது தெரியவந்தது.

இதனையடுத்து கிணற்றின் அருகே இருந்த 300 லிட்டர் சாரய ஊறல் மற்றும் காய்ச்சி விற்பனைக்கு வைத்திருந்த 15 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கீழே ஊற்றி அழித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 3 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News